வடமாகாண அரச திணைக்களங்களில் பணியாற்றுபவர்கள்வெளிநாடு செல்ல ஆளுநரின் அனுமதி பெறவேண்டும்
வடமாகாண அரச திணைக்களங்களில் பணியாற்றுபவர்கள், வெளிநாடு செல்வதாயின் மாகாண ஆளுநரிடமிருந்து விடுமுறைக்குரிய அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டும் என வட மாகாண பிரதம செயலாளர் பத்திநாதன் திணைக்களத் தலைவர்களுக்கு தெரிவித்துள்ளார்.
பயிற்சி நெறிகள், புலமைப் பரிசில்கள் மற்றும் கற்கைநெறிகளுக்கு வடகாகண அரச உத்தியோகஸ்தர்கள் வெளிநாடு செல்வதாயின் விடுமுறை அனுமதி பெறவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரச உத்தியோகஸ்தர்கள் பயணத்தை மேற்கொண்டதன் பின்னர் திணைக்களத் தலைவர்கள் மற்றும் அமைச்சு செயலாளர்களின் பரிந்துரையுடன் கடமை விடுமுறை விண்ணப்பங்கள் மற்றும் இடைசேர் செலவுக் கொடுப்பனவு விண்ணப்பங்கள் என்பன அனுமதிக்கப்படுகின்றமை அண்மைக் காலமாக அவதானிக்கப்படு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்பவர்கள் உரிய அனுமதிகளைப் பெற்ற பின்னர் தமது பயணத்தை மேற்கொள்ளும் நடைமுறைகள் கடைபிடிக்கப்படுவதை உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.