Breaking News

லசந்த விக்கிரமதுங்கவின் கொலை! முக்கிய பொலிஸ் அதிகாரிகள் விசாரணை செய்யப்பட்டுள்ளனர்

சண்டேலீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலை தொடர்பில் முன்னாள் உதவி பொலிஸ்மா அதிபர் ஜெயந்த விக்கிரட்ன, விசாரணை செய்யப்பட்டுள்ளார்’

இதனை தவிர லசந்த கொலை செய்யப்பட்டபோது கல்கிஸ்ஸை பொலிஸ் நிலையத்தில் பணியில் இருந்த சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி பிரசன்ன நாணயக்கார மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஹேமந்த அதிகார் ஆகியோரும் விசாரணை செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை இந்த கொலை தொடர்பில் இராணுவ புலனாய்வுத்துறையின் அதிகாரி கந்தகெதர பியவன்சவை விசாரணை செய்ய பொலிஸார் சட்டமா அதிபரின் ஆலோசனையை கோரியுள்ளனர்