கூட்டு எதிர்க் கட்சிக்கு அரசாங்த்தால் அச்சுறுத்தல் – டளஸ்
வரவு செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களிக்க வைக்க கூட்டு எதிர்க் கட்சியினர் மீது பல்வேறு சூழ்ச்சிகள் இடம்பெற்று வருவதாக அக்கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
கூட்டு எதிர்க் கட்சியிலுள்ள 23 உறுப்பினர்கள் மீது குறிவைத்து அரசாங்கம் கண்காணிப்பு நடவடிக்கையை முடக்கிவிட்டிருப்பதாக கூட்டு எதிர்க் கட்சிகளின் அங்கத்தவரும், பாராளுமன்ற உறுப்பினருமான டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
இந்த உறுப்பினர்கள் மீது பல்வேறு உத்தியோகப்பற்றற்ற அறிவிப்புக்கள், அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வருகின்றன. இவர்களின் பிள்ளைகள், மனைவி என்போர் மீது நியாயமற்ற குற்றச்சாட்டுக்களை சுமத்தி நிதி மோசடி தொடர்பான பொலிஸ் விசாரணைப் பிரிவுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
இவை அனைத்தும் நடைபெற்றாலும் கூட்டு எதிர்க்கட்சியிலுள்ளவர்களை அரசாங்கத்தினால் அசைக்க முடியாது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.