பசிலுக்கு எதிராக ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை!
திவிநெகும திணைக்களத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி முறைகேடு தொடர்பில் பாரிய ஊழல் மோசடிகள் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ, திவிநெகும திட்டத்தின் நிதியை பிரத்தியேக விமான போக்குவரத்திற்கு பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இலங்கை விமான படையினரின் விமான போக்குவரத்திற்காக திவிநெகும நிதியிலிருந்து 1,556 இலட்சம் ரூபா நிதியை பசில் ராஜபக்ஸ விமானப்படையினருக்கு வழங்கியுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக ஆணைக்குழுவின் செயலளார் லெசில் டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் பொருளாதார அமைச்சின் முன்னாள் கணக்காளர் மற்றும் விமானப்படை அதிகாரிகளிடமும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
எனவே இந்த விடயம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பாரிய ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலளார் லெசில் டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.