Breaking News

முல்லைத்தீவில் விடுவிக்கப்படாமல் 13 ஆயிரத்து 487 ஏக்கர் காணிகள்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் மாத்திரம், 13 ஆயிரத்து 487 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படாமல் படையினர் வசமுள்ளதாக மாவட்ட செயலக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு உள்ள நிலங்களில் காணி அனுமதிப்பத்திரங்கள் மற்றும் பொதுக் காணிகளாக 12 ஆயிரத்து 785 ஏக்கர் காணிகளும், உறுதிக்காணிகளாக 702 ஏக்கர் காணிகளும் படையினர் வசமுள்ளதாக புள்ளிவிபரங்கள் குறிப்பிடுகின்றன.

இவை தவிர, கடந்த 1983ஆம் ஆண்டு தொடக்கம் சிங்கள குடியேற்றங்களுக்காக ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

புதிய அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் வடக்கில் படையினர் வசமுள்ள காணிகள் பகுதியளவில் விடுவிக்கப்பட்டாலும், அவை முழுமையாக விடுவிக்கப்படவேண்டுமென வலியுறுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.