இன்று சர்வகட்சி மாநாடு
உள்ளூராட்சிமன்றங்களுக்கான எல்லை நிர்ண யம் தொடர்பாக ஏற்பட்டுள்ள சிக்கல்கள் மற்றும் முரண்பாடுகள் குறித்து ஆராயும் சர்வகட்சி மாநாடுஇன்று வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவுள்ளது.
பத்தரமுல்லையில் நடைபெறவுள்ள இந்த சர்வகட்சி மாநாட்டில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சபாநாயகர் கருஜயசூரியஎதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹந்த தேசப்பிரிய மற்றும் ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.
இதன்போது உள்ளூராட்சிமன்றங்களுக்கான எல்லை நிர்ணயம் தொடர்பாக ஏற்பட்டுள்ள சிக்கல்கள் மற்றும் முரண்பாடுகள் குறித்து ஆராயப்படவுள்ளதுடன் இது தொடர்பில் கிடைக்கப்பெற்றுள்ள யோசனைகளும் பரிசீலிக்கப்படவுள்ளன.