அரச ஊழியர்களுக்கு 10 ஆயிரம் ரூபா சம்பள உயர்வு - பிரதமர் அறிவிப்பு
அரச ஊழியர்களுக்கு அதிகரிக்கப்படும் என உறுதியளிக்கப்பட்ட 10 ஆயிரம் ரூபா சம்பள உயர்வு எதிர்வரும் வருடம் முதல் தலா இரண்டாயிரம் ரூபாவாக அடிப்படை சம்பளத்தில் சேர்த்துக் கொள்ளப்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் இன்று திங்கட்கிழமை அறிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று திங்கட்கிழமை ஆற்றிய சிறப்பு உரையின்போதே பிரதமர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.
அதேவேளை வாகன அனுமதிப் பத்திரத்திற்கான கட்டணம் 10 சதவீதத்தில் குறைக்கப்படும் என்று தெரிவித்த பிரதமர், ஐயாயிரம் ரூபா என்று அறிவிக்கப்பட்டிருந்த புகைப் பரிசோதனைக் கட்டணம் ஆயிரத்து 500 ரூபாவாக குறைக்கப்படும் என்றும் கூறினார்.
மேலும் எதிர்வரும் வருடம் மே மாதத்திலிருந்து தனியார் ஊழியர்களுக்கு இரண்டாயிரத்து 500 ரூபா சம்பள உயர்வு வழங்கப்படும் என்ற உறுதிமொழியையும் பிரதமர் வழங்கினார்.
அத்துடன், அரச ஊழியர்களுக்கான ஓய்வூதியத்தை பாதுகாப்பான நிலைக்கு இட்டுச்செல்வதே அரசாங்கத்தின் நோக்கமென பிரதமர் சுட்டிக்காட்டினார்.