Breaking News

சர்வதேச மனித உரிமைகள் நாள் முன்னிட்டு வவுனியாவில் கவனயீர்ப்பு(படங்கள்)


சர்வதேச மனித உரிமைகள் தினத்தினை முன்னிட்டு
வவுனியா மத்திய பேரூந்து தரிப்பிடத்திற்கு முன்பாக இன்று காலை 10.30 மணியளவில் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி, வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு, காணாமற்போனோரை தேடியறியும் குழு, அரசியல் கைதிகளை கண்டறியும் குழு, நவசமாஜசக்கட்சி ஆகியன இணைந்து இவ் ஆர்ப்பாட்டப் பேரணியை மேற்கொண்டனர். 

சர்வதேச மனித உரிமைகள் தினத்தினை முன்னிட்டு வவுனியாவில் நடைபெற்ற இவ் ஆர்ப்பாட்டமானது, வவுனியா மத்திய பேரூந்து தரிப்பிடத்திலிருந்து பேரணியாக மணிக்கூட்டக் கோபுர சந்தி வழியாக புகையிரத நிலைய வீதிவழியாக சென்று முத்தையா மண்டபத்தில் அனைத்து அமைப்புக்களும் ஒன்று கூடினர். 

காலை 11.20 மணியளவில் முத்தையா மண்டபத்தில் தமது காணாமற்போன உறவுகளுக்காக ஈகைச்சுடர்களை வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் காணாமற்போன உறவுகள் பொது மக்கள் ஏற்றி வைத்தனர்.













இதே வேளை இதே போன்ற நிகழ்வு மன்னாரிலும் இடம்பெற்றுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன