Breaking News

ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு 1,157 முறைப்பாடுகள்

பாரிய மோசடிகள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு பொதுமக்களிடமிருந்து 1157 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


கடந்த 2010ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் தொடக்கம் 2015 ஆம் ஆண்டு ஜனவரி வரையான காலப்பகுதிக்குள் நடைபெற்ற மோசடிகள் தொடர்பாக விசாரிக்கும் அதிகாரம் மட்டுமே குறித்த ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அதற்கு முன்னைய வருடங்களின் மோசடிகள் தொடர்பில் ஆராய ஆணைக்குழுவுக்கு அதிகாரம் இல்லை என்றும் பொதுமக்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.