உள்ளக விசாரணைப் பொறிமுறை குறித்து கூட்டமைப்பு ஜனாதிபதிக்கு அறிக்கை
யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் மேற்கொள்ளப்படவுள்ள உள்ளக விசாரணைப் பொறிமுறைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் பல்வேறு பிரேரணைகள் அடுத்து வரும் நாட்களில் முன்வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த பிரேரணைகள் அறிக்கையாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் முன்வைக்கப்படவுள்ளது.
இதேவேளை, உள்ளக விசாரணைப் பொறிமுறைக்கு சர்வதேச நீதிபதிகள் நியமிக்கப்படுவது அவசியம் என வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஷ்வரன் யாழுக்கு விஜயம் செய்திருந்த ஜப்பான் நாட்டு தூதுவர் நெனிச் சுகுவாவிடம் உறுதிப்படத் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்குள் தமிழ் நீதிபதிகள் இருந்தபோதிலும், அவர்கள் சரியான தீர்மானங்களை எடுக்க மாட்டார்கள் எனவும் முதலமைச்சர் மேலும் கூறியுள்ளதாக இன்றைய சிங்கள வார இதழொான்று அறிவித்துள்ளது