மரக்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளது!
மரக்கறி, மிளகாய், சீனி மற்றும் அரசியின் விலைகள் பாரியளவில் அதிகரித்துள்ளதாக நுகர்வோர் விசனம் வெளியிட்டுள்ளனர்.
நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய அமைப்பினால் இந்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.பச்சை மிளகாயின் விலை கிலோ ஒன்று ஆயிரம் ரூபாவிற்கு மேல் உயர்வடைந்துள்ளதாக நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் ரஞ்சித் விதானகே தெரிவித்துள்ளார்.
ஒரு கிலோ சம்பா அரிசியின் விலை 100 ரூபா முதல் 120 ருபா வரையில் உயர்வடைந்துள்ளது.ஒரு கிலோ சீனியின் விலை 100க்கு மேல் உயர்வடைந்துள்ளது.மரக்கறி வகைகளின் விலைகளும் பாரியளவில் அதிகரித்துள்ளது.
மரக்கறி வகைகளின் விலைகள் கிலோ ஒன்று 250 ரூபாவிற்கு மேல் உயர்வடைந்துள்ளது.சில வாரங்களுக்கு முன்னதாக 60 முதல் 65 ரூபாவி;ற்கு விற்பனை செய்யப்பட்ட நாடு அரிசி ஒரு கிலோ 80 ரூபாவாக உயர்வடைந்துள்ளது.
ஒரு கிலோ பெரிய வெங்காயம் மற்றும் ஒரு கிலோ உருளைக் கிழங்கு ஆகியன 175 ரூபா முதல் 200 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுகின்றது.இவ்வாறு பொருட்களின் விலைகள் உயர்வடைந்துள்ளதனால் மக்கள் தங்களது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக ரஞ்சித் விதானகே தெரிவித்துள்ளார்.