அனுர குமார எனக்கு நேரடியாக தகவல் வழங்கியவர் – கோட்டாபய
முற்போக்கு சோசலிச கட்சியின் முக்கிய உறுப்பினரான குமார் குணரத்னத்தை கைது செய்வதற்கு தான் பாதுகாப்புச் செயலாளராக பதவி வகித்த காலத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தனக்கு தகவல் வழங்கியதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அனுர குமார உட்பட மக்கள் விடுதலை முன்னணிக்கு முற்போக்கு சோசலிசக் கட்சி பாரிய அச்சுறுத்தலாக விளங்கியது. இதனால், குமார் குணரத்னத்தை கைது செய்து நாடு கடத்துவது மக்கள் விடுதலை முன்னணியின் முக்கிய தேவையாக காணப்பட்டது.
அனுர குமார திஸாநாயக்க தன்னுடன் நேரடியாகத் தொடர்புகொண்டு குணரத்னம் செல்லும் இடங்கள் தொடர்பில் தகவல்களை வழங்கியதாகவும் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று அறிவித்துள்ளது.