Breaking News

தமிழர்கள் என்ற காரணத்திற்காகவே அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படவில்லை!

தமிழர்கள் என்ற ஒரே காரணத்திற்காகவே தமிழ் அரசியல் கைதிகளுக்கு இதுவரையில் பொதுமன்னிப்பு வழங்கப்படவில்லை என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுந்தரம் மகேந்திரன் தெரிவித்தார்.

அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் கொழும்பில் இன்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் உடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், மரண தண்டணை விதிக்கப்பட்ட பல அரசியல் கைதிகள் இதற்கு முன்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

எனினும் தமிழர்கள் என்ற ஒரே காரணத்திற்காகவே இதுவரையில் அரசியல் கைதிகள் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட வில்லை.

மேலும், மஹிந்த தலைமையிலான அணி நாட்டில் மீண்டும் இனவாதத்தினை தூண்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். எனவும் தெரிவித்துள்ளார்.