அமைச்சுப் பதவியை சிறுபிள்ளைக்கு வழங்குக - அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கோரிக்கை
அமைச்சுப் பதவியை சிறுபிள்ளைக்கு வழங்குமாறு பல்கலைக்கழக ராஜாங்க அமைச்சர் மொஹான் லால் கிரேருவிடம், அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கோரியுள்ளது.
பல்கலைக்கழக மாணவர்கள் பிரச்சினை தொடர்பில் அமைச்சருடன் நடத்திய பேச்சுவார்த்தைகள் வெற்றியளிக்கவில்லை என ஒன்றியம் தெரிவித்துள்ளது.
நேற்று நடைபெற்ற எதிர்ப்பு போராட்டத்தின் பின்னர் பல்கலைக்கழக அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
எனினும் தமது போராட்டத்தை நிறுத்துவதற்கு எவ்வித சாதகமான பதில்களையும் அரசாங்கம் வழங்கவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, மாலம்பே தனியார் பல்கலைக்கழகம் தொடர்பில் தமக்கு தனியான தீர்மானம் எதனையும் எடுக்க முடியாது என அமைச்சர் கிரேரு தெரிவித்துள்ளார்.