Breaking News

மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளி தாவூத் இப்ராகிமுடன் மும்பை பொலிஸார் தொடர்பு

மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளி தாவூத் இப்ராகிமுக்கு மும்பை பொலிஸார் சாதகமாக செயல்படுவதாக நிழல் உலக தாதா சோட்டா ராஜன் பரபரப்பு தகவலை கூறியுள்ளார். 

எனவே, தன்னிடம் விசாரணை நடத்தும் முன்பு இதனை மத்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்தோனேசியாவின் பாலி நகரில் கைது செய்யப்பட்டு, அங்கு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார் நிழல் உலக தாதாவான சோட்டா ராஜான். 

53 வயதாகும் சோட்டா ராஜன் மீது மும்பை மற்றும் டெல்லியில் ஏராளமான கொலை மற்றும் கடத்தல் வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், சில தினங்களுக்கு முன் இந்தோனேசியாவின் பாலி தீவில் கைது செய்யப்பட்டான். 

தாம் ஒரு போதும் தாவூத் இப்ராகிமுக்கு அஞ்சியதில்லை என்ற சோட்டா ராஜன், தாவூத்திற்கு எதிராகவும் தீவிரவாதத்திற்கு எதிராகவுமே தொடர்ந்து போராடி வருவதாகவும் கூறியுள்ளான். மேலும் தம் மீது போடப்பட்டுள்ள வழக்குகள் அனைத்தும் பொய்யானவை என்றும் தெரிவித்த சோட்டா ராஜன், இந்திய அரசு தம்மை எங்கு கொண்டு சென்று விசாரித்தாலும் நீதி தவறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளான்.