அரசியல் கைதிகளை விடுதலை செய்ய கோரி யாழ் ஐ.நா அலுவலகம் முற்றுகயிட்டு போராட்டம்
சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் மேற்கொள்ளும் உண்ணாவிரத போராட்டத்தை நிறைவுக்கு கொண்டுவருவதோடு, அவர்களது விடுதலையையும் வலியுறுத்தி, கைது செய்யப்பட்டுள்ளவர்களின் உறவினர்கள் இன்று யாழிலுள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்தின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமது சிறையிருப்புக்கு சரியான முடிவையும், தமது விடுதலையும் தற்போதைய அரசாங்கம் பெற்றுத்தர வேண்டுமெனக் கோரி, ஒன்பதாவது நாளாக இன்றும் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் தொடர்ந்து வரும் நிலையில், அவர்களது உறவினர்கள் இன்று இந்த ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்டுள்ளனர்.
மேலும், யாழில் பெய்துவரும் அடை மழை வெள்ளத்துக்கும் மத்தியில் இவர்கள் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.