மஹிந்த, சுசில் உள்ளிட்ட ஏழ்வரை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவு
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர்களான சுசில் பிரேமஜயந்த, அனுர பிரியதர்ஷன யாப்பா உள்ளிட்ட ஏழ்வரை, நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் நடவடிக்கைகளின் நிமித்தம் இலங்கை போக்குவரத்து சபை பஸ்களைப் பயன்படுத்தியமைக்காக கட்டணங்கள் வழங்கப்படாமை தொடர்பிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலப் பகுதியில் பிரச்சார நடவடிக்கைகளுக்காக இலங்கை போக்குவரத்துச் சபை பஸ்களை பயன்படுத்திவிட்டு கட்டணம் வழங்காதமையால், 140 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நஸ்டம் ஏற்பட்டுள்ளதாக, இலங்கை போக்குவரத்துச் சபை கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தது.
இந்த மனு தொடர்பிலான விசாரணைகளுக்காகவே எதிர்வரும் மார்ச் 10ம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு இவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.