Breaking News

அரசியல் கைதிகளின் விடுதலையை எதிர்த்து வீதியில் இறங்கிய இராவணா பலய!

அரசியல் கைதிகளின் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து இராவணாபலய அமைப்பு ஜனாதிபதி செயலகத்திற்கு பயணித்துள்ளனர்.

ஜனாதிபதி செயலகத்திற்கு வருகைத் தந்துள்ள இராவணா பலய அமைப்பின் பிரதிநிதிகள், ஜனாதிபதிக்கு மகஜரொன்றையும் கையளிக்க தயாராகியுள்ளனர்.

தமிழ் அரசியல் கைதிகள் என கூறப்படுவோர் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் எனவும், அவர்களை விடுதலை செய்வது தவறு எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தமிழீழ விடுதலைப் புலி அமைப்புடன் தொடர்புடையவர்களை விடுதலை செய்வதன் ஊடாக நாட்டை மீண்டும் குழிக்குள் கொண்டுசெல்ல அரசாங்கம் முயற்சிப்பதாக இராவணா பலய அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, ஜனாதிபதி செயலாளருக்கும், இராவணா பலய அமைப்பின் பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக கூறப்படுகிறது.