கோதபாயவை அரசியலுக்கு கொண்டு வர முயற்சி
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸவை அரசியலுக்கு கொண்டு வர முயற்சிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
கோதபாயவின் தலைமையில் இழந்தவற்றை மீளப் பெற்றுக் கொள்ளவும் ராஜபக்ஸக்களை வெற்றிப் பாதைக்கு இட்டுச் செல்லவும் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகின்றது. இதன் ஓர் கட்டமாகவே எதிர்வரும் 18ம் திகதி கொழும்பில் கூட்டு எதிர்க்கட்சிகளின் கூட்டமொன்று நடத்தப்பட உள்ளது.
கூட்டு எதிர்க்கட்சியின் தலைவராக தினேஸ் குணவர்தன செயற்பட்டு வருகின்றார். எனினும், உள்ளகத்தலைவராக கோதபாய ராஜபக்ஸ கடயைமாற்றுவதாகவும் இதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் ஆதரவு கிட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.