Breaking News

வட ­கி­ழக்கு மக்­களின் மீள்­கு­டி­யேற்றம் தொடர்பில் ஜனா­தி­பதி தலை­மையில் புத­னன்று கலந்­து­ரை­யாடல்

வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களில் மக்­களின் மீள்­கு­டி­யேற்றம் தொடர்­பாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் நாளை மறு­தினம் விசேட கலந்­து­ரை­யா­ட­லொன்று நடை­பெ­ற­வுள்­ளது.

இக்­க­லந்­து­ரை­யா­டலில் பங்­கேற்­கு­மாறு மீள்­கு­டி­யேற்றம் புனர்­நிர்­மாணம் மற்றும் இந்து சமய அலு­வல்கள் அமைச்சர் டி.எம்.சுவா­மி­நாதன் மற்றும் கைத்­தொழில் வணிக அமைச்சர் ரிஷாட் பதி­யுதீன் ஆகி­யோ­ருக்கு ஜனா­தி­ப­தியின் செய­லாளர் பி.பீ.அப­யகோன் அழைப்­பு­வி­டுத்­துள்ளார்.

இவ்­வ­ழைப்பு தொடர்பில் அமைச்சர் டி.எம்.சுவா­மி­நாதன் தெரி­விக்­கையில்,

யுத்தம் நிறை­வ­டைந்து ஐந்து வரு­டங்கள் கடந்த நிலை­யிலும் வடக்கு, கிழக்கு மக்­களின் மீள்­கு­டி­யேற்ற செயற்­பா­டுகள் முழுமை பெற்­றி­ருக்­க­வில்லை. தற்­போது நாட்டில் புதிய மாற்றம் ஏற்­பட்­டுள்­ளது. நாம் அனைத்து மக்­க­ளையும் தமது சொந்த நிலத்தில் மீளவும் குடி­யேற்­று­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்து வரு­கின்றோம்.

இந்த செயற்­பா­டுகள் எனது அமைச்சின் கீழாக முறை­யாக திட்­ட­மிட்டு முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. இதன் அங்­க­மாக மக்­க­ளுக்குச் சொந்­த­மான காணிகள் படிப்­ப­டி­யாக விடு­விக்­கப்­பட்டு வரு­கின்­றன. அதே­நேரம் வீடு­களை அமைப்­ப­தற்­கான கேள்­வி ­கோரல் உள்­ளிட்ட விட­யங்­களும் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன.

எம்­மைப்­பொ­றுத்­த­வ­ரையில் தமிழ், முஸ்லிம் மக்கள் என்ற பாகு­பா­டு­களை நாம் கரு­த­வில்லை. சிறு­பான்மை சமூ­கத்தின் மீள்­கு­டி­யேற்றம், உட்­கட்­ட­மைப்பு மேம்­பாடு, அபி­வி­ருத்தி போன்ற விட­யங்­களை எந்­த­வொரு பக்­கச்­சார்பு நிலை­யி­லி­ருந்து முன்­னெ­டுக்­காது வெளிப்­ப­டைத்­தன்­மை­யுடன் அனைத்து மக்­க­ளையும் கருத்தில் கொண்டு முன்­னெ­டுத்து வரு­கின்றோம். அவ்­வா­றான நிலையில் அப்­ப­ணி­களை மேலும் முன்­னெ­டுத்­துக்­கொள்­வ­தற்கு ஜனா­தி­பதி தலை­மை­யி­லான கலந்­து­ரை­யாடல் ஆக்­க­பூர்­வ­மா­ன­தாக அமையும் என்றார்.

இவ்­வ­ழைப்பு தொடர்பில் அமைச்சர் ரிஷாட் பதி­யுதீன் கருத்து வெளியி­டு­கையில்,

வட­மா­கா­ணத்­தி­லி­ருந்து முஸ்­லிம்கள் வெளியேற்­றப்­பட்டு 25 வரு­டங்கள் கழிந்த நிலை­யிலும் இவர்கள் தொடர்பில் ஆக்­க­பூர்­வ­மான நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­படாத நிலையில் தற்­போது அம் மக்கள் சிர­மத்­துக்கு மத்­தியில் மீள்­கு­டி­யே­று­வ­தற்கு முற்­ப­டும்­போது அதற்கு எதி­ரான செயற்­பா­டு­க­ளையும்,பிழை­யான தக­வல்­க­ளையும் வெளியிட்டு இம்­மக்­க­ளது தேவைப்­பா­டு­களை மழுங்­க­டிக்கும் செயற்­பா­டுகள் இடம் பெறு­கின்­றன.

இச்­செ­யற்­பா­டுகள் இந்த நாட்டில் ஒரு சிறு­பான்மை சமூ­கத்­திற்கு எதி­ராக மேற்­கொள்­ளப்­படும் அநீ­தி­யான செயற்­பா­டாகும். வாழ்­வி­டத்­தி­லி­ருந்து வெளியேற்­றப்­பட்ட குடும்ப உறுப்­பினர் என்ற வகையில் இந்த போராட்­டத்தின் உண்­மைத்­தன்­மை­யினை எடுத்து கூற வேண்­டிய தேவை எனக்­கி­ருக்­கின்­றது. இந்த மக்­க­ளது வாக்­கு­களால் பாரா­ளு­மன்றம் வந்த நான்,எமது மக்கள் தொடர்பில் மௌன­மாக இருக்க முடி­யாது, கடந்த அர­சாங்க காலத்தில் இம்­மக்­களின் மீள்­கு­டி­யேற்­றத்தை ஆரம்­பித்த போதும் அத­னையும் தடைப்­ப­டுத்­தினர்.

நல்­லாட்­சியில் வட­புல முஸ்­லிம்கள் எதிர்­பார்த்­தது, கௌர­வ­மான மீள்­கு­டி­யேற்­றத்தை ஆனால் அதனை செய்­வதில் காணப்­படும் தடங்கல் என்ன என்­பது தொடர்பில்,ஜனா­தி­பதி, பிர­தமர் மற்றும் அது தொடர்­பான அமைச்­ச­ரி­டத்­திலும் பல முறை கேட்­டுள்ளேன். ஆனால் அது நடைமுறைக்கு வர­வில்லை. பாரா­ளு­மன்­றத்தில் எமது மக்­களின் இந்த யதார்த்த நிலை தொடர்பில் உரை­யாற்­றி­யுள்ளேன்.

தற்­போது ஜனா­தி­பதி என்னை வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்­க­ளது மீள்­கு­டி­யேற்ற நிலை தொடர்பில் கலந்­து­ரை­யா­டல்­களை செய்ய அழைப்­பு­வி­டுத்­துள்ளார். அதற்கு எமது மக்­க­ளது சார்பில் நன்­றி­களை தெரி­வித்துக் கொள்­கின்றேன் என்றார்.

முன்­ன­தாக கடந்த 5 ஆம் திகதி புதன் கிழமை இடம்­பெற்ற அமைச்­ச­ரவைக் கூட்­டத்தின் போது மீள்­கு­டி­யேற்ற அமைச்சர் சுவா­மி­நாதன் முஸ்­லிம்கள் தொடர்பில் வெளியிட்­டுள்ள பிழை­யான புள்­ளி­வி­ப­ரங்கள் மக்­களை வெகு­வாக பாதித்­து­வ­ரு­வ­தா­கவும், வெளியேற்­றப்­பட்ட முஸ்­லிம்­களில் தானும் ஒருவன் என்ற வகையில் இந்த மக்­களின் வேத­னை­க­ளையும்,தேவை­க­ளையும் இந்த அமைச்­ச­ரவை கூட்­டத்தில் சக­ல­ருக்கும் விளக்­க­ம­ளிக்க நேரம் தரப்­பட வேண்­டு­மென அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும்,அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் விடுத்த வேண்டுகோளுக்கு கிடைத்த அனுமதிக்கு அமைவாக அவ்விடயங்களை புள்ளி விபரங்களுடன் அமைச்சரவையில் விவரித்தார்.

தொடர்ந்து வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் ஜனாதிபதியும், பிரதமரும் மற்றும் மீள்குடியேற்ற அமைச்சரும் எவ்விதமான ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்கவில்லையெனவும் அது

தொடர்பில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கோரிக்கை விடுத்தி ருந்தமை குறிப்பிடத்தக்கது.