பீஹார் தேர்தலில் நிதிஷ் தலைமை கூட்டணி வெற்றி: மோடி, அமித் ஷா வாழ்த்து
பீஹார் தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு கடும் பின்னடைவை அளித்துள்ள நிலையில், நிதிஷ் தலைமை மெகா கூட்டணிக்கு பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவர் அமித் ஷா வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடி பீஹாரில் மூன்றாவது முறையாக மீண்டும் முதல்வரான நிதிஷூக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மேலும் பீஹார் முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளக் கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ் ஆகியோருக்கு அமித் ஷா வாழ்த்து தெரிவித்தார்.
அவர் தெரிவித்த வாழ்த்து செய்தியில், ‘பீஹார் மாநிலத்தை வளர்ச்சியின் பாதைக்கு இட்டுச் செல்ல புதிய பீஹார் அரசுக்கு எங்கள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
பீஹார் மக்களின் தீர்ப்பை மதிக்கிறோம், பீஹார் சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றதற்காக நான் நிதிஷ் குமார், லாலு பிரசாத் யாதவு ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.