Breaking News

தமிழ் அரசியல் கைதிகள் ஜனாதிபதிக்கு கடிதம்

இலங்கையில் பல்வேறு சிறைகளில் உண்ணாவிரதப் போராட்டத்தை மீண்டும் ஆரம்பித்துள்ள தமிழ் அரசியல் கைதிகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளனர்.

ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதிகளின் பிரகாரம் தமது விடுதலை தொடர்பில் தீர்க்கமான முடிவுகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என குற்றஞ்சாட்டி, நேற்றைய தினம் அவர்கள் மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.

எவ்வாறாயினும் நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டுள்ள 32 தமிழ் அரசியல் கைதிகளை இன்றைய தினமும் ஏனைய 30 பேரை எதிர்வரும் 20 ஆம் திகதிக்குள்ளும் பிணையில் விடுதலை செய்வதாக, தமிழ் தேசிய கூட்டமைப்புடன் அண்மையில் நடைபெற்ற சந்திப்பில் பிரதமர் கூறியிருந்தார். இந்த அறிவிப்பு குறித்து அதிருப்தி வெளியிட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள், தம்மை பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தியிருந்தனர்.