Breaking News

இலங்கையில் பயங்கவாத தடைச்சட்டம் நீக்கப்படக் கூடாது – ஹிஸ்புல்லா

இலங்கையில் பயங்கவாத தடைச்சட்டம் நீக்கப்படவேண்டும் என்று சர்வதேசம் கோரும் நிலையில், புனர்வாழ்வுத்துறை அமைச்சர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஇந்த சட்டம் நீக்கப்படக்கூடாது என்று குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பின் ஊடகம் ஒன்றுக்கு செவ்வியளித்துள்ள அவர், பயங்கரவாத தடைச்சட்டம் குறித்து கருத்து வெளியிடுகையில்;

இலங்கை பயங்கரவாதம் தொடர்பில் நன்கு கற்றறிருந்துள்ளது. இந்நிலையில் சர்வதேச பயங்கரவாதம் தற்போது மோசமாகி வருகிறது. எனவே அதனால் வரும் அச்சுறுத்தல்களுக்காக இந்த சட்டம் நீக்கப்படுவது சீக்கிரமான முடிவு என்று தாம் நம்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை தாம் மீன்குடியேற்றத்துறை அமைச்சர் டி எம் சுவாமிநாதனுடன் இணைந்து பணியாற்றுவதில் எவ்வித சிக்கல்களையும் கொண்டிருக்கவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வெகு விரைவில் புத்தளத்தில் உள்ள யாழ்ப்பாண முஸ்லிம்கள் மீண்டும் சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்படுவர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.