இராணுவத்தின் ஆக்கிரமிப்பால் 9,819 குடும்பங்கள் மீள்குடியேறமுடியாத நிலையில்
முதலமைச்சர் தலைமையிலான மாவட்ட மீள்குடியேற்ற செயற்பாட்டுக் குழுவினால் மீள்குடியேற்றங்கள் தொடர்பிலான கலந்துரையாடல் யாழ். மாவட்டச்செயலகத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது.
ஜனாதிபதியின் பணிப்பிற்கமைய வடமாகாணத்திலுள்ள மீள்குடியேற்றங்கள் தொடர்பில் ஆராய்ந்த பின்னர்ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த முதலமைச்சர்,
யாழ்.மாவட்டத்தில் 9,700 ஏக்கர் நிலம் தொடர்ந்தும் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும், இந்தநிலையில் 9,819 குடும்பங்கள் மீள்குடியேறமுடியாத நிலையில்31 நலன்புரி நிலையங்கள் மற்றும் உறவினர், நண்பர்கள் வீடுகளில் தங்கியிருப்பதாகவும் முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.