Breaking News

பல்கலைக்கழக மாணவர்களுக்கு வட்டியில்லாக் கடன்

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் வட்டியில்லாக் கடன் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். 

அத்துடன் அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் இலவச வைபை (WIFI) வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். 

மகபொல பல்கலைக்கழகம் மாலபேயில் அமைக்கப்படுவதுடன் அனைத்து பல்கலைக்கழக மாணவர்களுக்கும் 2018ம் ஆண்டிற்குள் விடுதி வசதிகள் வழங்கப்படும் என்றும் நிதியமைச்சர் ரவி கருணாநாக்க தெரிவித்தார். 

உயர்தரப் பரீட்சைக்கு பின்னர் அனைத்து மாணவர்களுக்கும் தொழில் பயிற்சி வழங்கப்படவுள்ளது என்றும் குறிப்பிட்டார். 

அத்துடன் ஆரம்ப பாடசாலை அபிவிருத்திகளுக்காக 10000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்படவுள்ளதுடன் நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளிலும் ஒரு வகுப்புக்கு 35 மாணவர்களாக வரையறை செய்யப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டார். 

மாணவர்களுக்கு வழங்கப்படும் சீருடைகளுக்குப் பதிலாக வொவ்ச்சர் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். 

மொத்தமாக நாட்டின் கல்வித்துறைக்கு 90 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்படுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.