ஊடகவியலாளர்கள் அவமதிக்கப்பட்டது தொடர்பாக வடக்கு மாகாண முதலமைச்சரின் விசேட அறிக்கை (Video)
தனது இல்லத்தில் வைத்து ஊடகவியலாளர்கள்
அவமதிக்கப்பட்டது தொடர்பாக வடக்கு மாகாண முதலமைச்சரால் எமது இணையத்தளத்திற்கு மட்டும் அனுப்பப்பட்ட விசேட அறிக்கை
எனது நேசமிக்க ஊடகவியலாளர்களே! நேற்று முன்தினம் எனது உத்தியோகபூர்வ இல்லத்தில் நடந்த சம்பவம் எனக்கு பெரும் மனவருத்தைத்தை அளிக்கின்றது. நாங்கள் தமிழர் என்ற உணர்வுடன் வடபகுதி ஊடகவியலாளர்கள் நடந்து கொள்கின்றார்கள். முதலில் நாங்கள் ஊடகவியலாளர்கள். அப்புறம் தான் நாங்கள் தமிழர்கள் என நடந்து கொள்ள வேண்டும். இவ்வாறு நடந்திருந்தால் முள்ளிவாய்க்கால்வரை எமது உறவுகள் சென்றிருக்க மாட்டார்கள்.
நேற்று முன் தினம் எனது இல்லத்தில் இந்தியா தொடர்பானவர்களைச் சந்தித்துவிட்டு சற்று ஆறுதலாக இருக்கலாம் என எண்ணினேன். அருகில் நின்ற பாதுகாப்பு உத்தயோகத்தரிடம் இதைத் தெரிவித்து விட்டு நான் இளைப்பாறிக் கொண்டிருந்த சமயம் சற்றுத் தொலைவில் மனிதர்களின் சலசலப்புக் கேட்டது. நானும் அசதியில் அதைக் கவனிக்காது விட்டுவிட்டேன். எத்தனை அறிக்கைகள் மேடைப் பேச்சுக்களுக்கான எழுத்துருவாக்கங்கள் நான் ஆயத்தப்படுத்த வேண்டும் என்று உங்களுக்கு தெரியுமா? ஊடகவியலாளர்களுக்கு தெரியுமா? ஆனால் அவற்றை எல்லாம் கருத்தில் எடுக்காது எனது உத்தியோக பூர்வ இல்லத்தினுள் அனுமதியில்லாது நுழைந்திருக்கிறார்கள் ஊடகவியாலாளர்கள் என்ற போர்வையில் வந்தவர்கள்.
அதனை எனது பாதுகாப்பு உத்தியோகத்தர் பார்த்து அவர்களை வெளியே போகுமாறு அன்புடன் தெரிவித்துள்ளார். ஆனால் அவர்கள் அதைக் கேட்காது உள்ளே நுiழைந்து எனது வாயைக் கிளறி தங்களுக் வேண்டியது மாதிரி எழுதுவதற்காகவும் அதை பல பல ஊடகங்களுக்கு ஊடக முதலாளியின் ரசனைக்கேற்ப மாற்றி மாற்றி எழுதி அனுப்புவதற்காகவுமே வந்திருந்தார்கள்.
இதனால் எனது பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒரு ஊடகவியலாளரின் ஆடையின் அழுக்கான கழுத்துப் பகுதியை மெதுவாகப் பிடித்து சட்டையே சற்று தூக்கி அசைத்து வெளியேறுமாறு கூறியபோது அங்கு ஊடகவியலாளர்கள் பெரும் போரே நிகழ்த்தி விட்டார்கள்.
இதில் எனக்குக் கவலை தரும் விடயம் என்னவென்றால் எனது தம்பி சரவணபவன் அவர்கள் நடாத்தும் பத்திரிகைளில் வேலை செய்யும் எனது பேரனைப் போல உள்ள டிலீப் என்ற பையனின் ஆவேசம் என்னைக் கவலை கொள்ளச் செய்து விட்டது. சிங்கள அரசால் எனக்காக நியமிக்கப்பட்ட பொலிஸ் நிற்கத்தக்கதாக எனது பாதுகாப்பு ஊழியரை அவமானப்படுத்தியது தாங்கமுடியாதுள்ளது. உண்மையில் நீங்களே அந்த வீடியோவைப் பார்த்தால் எல்லாம் புரியும். அந்த டிலீப்பை யாராவது தனி ஒருவராக தள்ளிச் செல்ல முடியுமா ?
எனக்கு ஒரு நண்பர் இருக்கின்றார். அவர் நான் வடக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடப் போகின்றேன் என அறிந்தவுடன் எனக்கு ஒரு விடயத்தைத் தெரிவித்தார். நீ சம்பந்தன், சுமந்திரன் ஆகியோரின் வழிநடத்தலில் அரசாங்கத்தின் ஆலோசனையில் செயற்படப் போகின்றாய் என தெரிகின்றது. உன்னை வெற்றிலை பாக்குடன் வரவேற்றுக் காத்திருக்கும் யாழ்ப்பாணத்தார் அடுத்த நிமிடம் விளக்குமாறாலும் கலைக்கத் தயங்கமாட்டார்கள். நீ இதைக் கருத்தில் எடுத்தக் கொண்டு போட்டியிடச் செல் என்று தெரிவித்தார். ' அவர்கள் அப்படியான ஆட்கள் இல்லை. மாவீரன் பிரபாகரனை வளர்த்தெடுத்தவர்கள். பிரபாகரன் என்ன செய்தாலும் பொறுத்திருந்தவர்கள். என்னையும் அவ்வாறே ஆக்குவார்கள் எனத் தெரிவித்தே தேர்தலில் நின்றேன்.
ஆனால் இங்கு நடப்பது எனக்குப் புரியாத புதிராக உள்ளது. நேரில் காலில் விழாத குறையாக வரவேற்கும் உதயன் சரவணபவன் தற்போது என்ன செய்கின்றார். தன்ர ஊழியனை ஏன் எனக்கு எதிராகத் திசை திருப்புகின்றார் என விளங்கவில்லை.
எனது உத்தியோகபூர்வ இல்லத்தினுள் நுளைந்து அட்டகாசம் பண்ணியது மட்டுமல்லாது அருகில் நின்ற பொலிசைப் பார்த்து உங்களுடன் நாங்கள் பிரச்சனை செய்யவில்லை என பொலிசாரைக் குளிர்வித்து எனது பாதுகாப்பு உத்தியோத்தருடன் முரண்பட்டது வேதனையாக இருக்கின்றது.
சரவணபவனும் இதே நிலையைத் தான் கையாள்கின்றார் என்பது எனக்குத் தெரியும். யாழ்ப்பாணத்தில் ஈ.பி.டி.பியுடன் மட்டுமே சண்டை போட்டுக் கொண்டு பாதுகாப்பு அமைச்சுச் செயலாளருடனும் பொருளாதார அமைச்சருடனும் நல்ல நட்பாக இருக்கின்றார். அதைப் போல் தனது ஊழியர்களையும் கொண்டு வந்துவிட்டார். மாவீரன் அலெக்சான்டர் போல்இ ஜனாதிபதி மகிந்தராஜபக்ச போல்இ தம்பி பிரபாகரன் போல் தொடர்ந்தும் உதயன் பத்திரிகையை எல்லோர் நெஞ்சிலும் இடம் பிடிக்க வைக்கலாம் என நினைத்துக் கொண்டு சரவணபவன் இருந்தால் அவர்களின் நிலைதான் இவருக்கும் உருவாகும்.
எமது இனத்திற்குள் உள்ள வேற்றுமைகளைக் களைவதற்கு ஊடகங்கள் முன்வரவேண்டுமே தவிர வேற்றுமைகளை உருவாக்குவதற்கு ஊடகங்கள் முன்வரக்கூடாது.
நான் கேள்விப்பட்டவரை யாழ்ப்பாணத்தில் உள்ள ஊடகவியலாளர்கள் பலர் ஆளுனரின் அலுவலகத்திற்கு செய்தி சேகரிக்கச் செல்கையில் அங்கு அவர்களுக்கு சிற்றுண்டி தொடங்கி மதிய போசணம் கூடக் கொடுபடுவதாகக் கேள்வி.. ஊடகங்களுக்கு என ஆளுனர் நிதி ஒதுக்கி வைத்துள்ளதாகவும் அறிய முடிகின்றது. ஆனால் எனக்கு அவ்வாறு நிதி ஒதுக்கவில்லை. அதனால்தான் நான் ஊடகவியாளர்களுக்கு இவற்றை வழங்க முடியாமல் இருக்கின்றது.
எனது அலுவலகத்தில் சிற்றுண்டி வழங்காத கோபத்தால்தான் இந்த ஊடகவியலாளர்கள் இவ்வாறு பல முறை நடந்துள்ளதாகத் தெரியவருகின்றது. ஊடகவியலாளர்கள் தமிழ்த் தேசியவாதியான என்னை அவமதிப்பது தேசியத்தை அவமதிப்பதாக இருக்கும்.
அத்துடன் வடக்கு ஆளுனர் மற்றும் வடக்கு மாகாண பிரதம செயலாளர்க்கு இவ்வாறான செயற்பாடுகள் மிகுந்த சந்தோசத்தைத் தரக்கூடியவை. ஆகவே இனிமேல் இவ்வாறான செயற்பாடுகளை ஊடகவியலாளர்கள் நிறுத்துமாறு எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டிக் கொள்கின்றேன்.