Breaking News

அரசியல் கைதிகள் விவகாரம் - நாளை கூடி ஆராய்கிறது கூட்டமைப்பு

தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பிலான அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து நாளை (ஞாயிற்றுக்கிழமை) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழு கூடி முடிவெடுக்கவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் குறிப்பிடுகின்றார்.

அரசியல் கைதிகளின் விடுதலைக் குறித்து நாளை மறுதினம் திங்கட்கிழமை தமது முடிவினை அறிவிக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் உறுதியளித்துள்ள நிலையில், அது தொடர்பிலும் நாளைய கூட்டத்தில் கவனம் செலுத்தப்படும் என்றும் கூறினார்.

அரசியல் கைதிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் உண்ணாவிரதப் போராட்டத்தினை மேற்கொண்டு வரும் நிலையில், அது குறித்து கூட்டமைப்பின் அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து ஊடகம் ஒன்றுக்கு தெரிவிக்கும்போதே இதனை அவர் குறிப்பிட்டார்.