யுத்தக் குற்றச் செயல் விசாரணை குறித்து கண்காணிக்க ருத்ரகுமாரன் குழு ஒன்றை நியமித்துள்ளார்
யுத்தக் குற்றச் செயல் விசாரணை குறித்து கண்காணிப்பதற்கு, நாடு கடந்த தமிழீழ இராச்சியத்தின் பிரதமர் வீ.ருத்ரகுமாரன் நிபுணர்குழுவொன்றை நியமித்துள்ளார்.ஐந்து பேர் அடங்கிய நிபுணர்குழுவொன்றை அவர் அமைத்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவையின் தீர்மானத்திற்கு அமைவான முறையில் இலங்கையில் விசாரணைகள் மற்றும் குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதல் போன்ற விடயங்கள் மேற்கொள்ளப்படுகின்றனவா என்பது குறித்து கண்காணிக்கப்பட உள்ளது.யுத்தக் குற்றச் செயல்கள், இனச்சுத்திகரிப்பு மற்றும் மனிதாபிமான மீறல்கள் தொடர்பில் எவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன என்பது குறித்து கண்காணிப்பதற்காக “பொறுப்பு கூறுதல்களை கண்காணிக்கும் விசேட குழு” ஒன்றை நிறுவியுள்ளார்.
இந்த ஐவர் அடங்கிய நிபுணர்குழுவில் பின்வருவோர் அங்கம் வகிக்கின்றனர்.
மேரி குய்ராவுட் Marie Guiraud (France)
பீட்டர் ஹெய்ன்ஸ் Peter Haynes QC (UK)
ரிச்சர்ட் ஜே ரொஜர்ஸ் Richard J Rogers (UK)
ஹிதர் ரெயன் Heather Ryan (USA)
நீதவான் அஜித் பிரகாஷ் சா Justice Ajit Prakash Shah (India)