மியன்மாரில் இன்று பொதுத் தேர்தல் ; முஸ்லிம்களுக்கு தடை
மியன்மாரில் இன்று (08) பொதுத் தேர்தல் நடைபெறுகிறது. 51 மில்லியன் சனத்தொகை கொண்ட மியன்மாரில் 30 மில்லியன் பேர் இன்று தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிகின்றன.
இந்நிலையில் குறித்த தேர்தலில் மியன்மார் முஸ்லிம்களுக்கு தேர்தலில் போட்டியிடவோ அல்லது வாக்களிக்கவோ அனுமதி வழங்கப்படவில்லை என “தி காடியன்” செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த சில வருடங்களாக மியன்மாரில் ரோஹிங்கியா முஸ்லிம்களை இலக்கு வைத்து பெளத்த இனவாதிகள் காட்டுமிராண்டித் தாக்குதல்களை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.