Breaking News

நாகதீபமென அழைப்பதை தடுக்க முடியாது - அது சிங்கள மக்களின் விருப்பம்; சம்பந்தன்

யாழ்ப்பாணம் - நயினாதீவில் நாகபூசணி அம்மன் ஆலயம் அமைந்துள்ளதால் அது நயினாதீவாகவே இருக்கின்ற அதேவேளை, விகாரை அமைந்திருக்கும் பிரதேசத்தை நாகதீபமென அழைப்பதற்கு சிங்கள மக்கள் விரும்புவதாகவும் அதனை நாம் எதிர்க்க முடியாது எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஐ.நாவிற்கான அமெரிக்க நிரந்தர வதிவிடப் பிரதிநிதி சமந்தா பவர் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கிடையில் இன்று சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.

இந்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட இரா.சம்பந்தனிடம், எமது அலுவலக செய்தியாளர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.