Breaking News

காணாமல் போன சிறுவன் உள்ளிட்ட இருவர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்பு

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திருப்பெருந்துறை பகுதி கிணறொன்றிலிருந்து 16 வயது சிறுவனின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது. 

கடந்த 5ம் திகதி வீட்டிலிருந்து வௌியேறிய இவர் மீளவும் வீடு திரும்பாத நிலையில் இன்று சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 

மேலும் இவர் மனவளர்ச்சி குன்றியவர் எனவும் கூறப்படுகின்றது.  இதேவேளை, யாழ். கைதடி தெற்கு பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் கிணற்றில் தவறி வீழ்ந்து மரணமாகியுள்ளார். 

​நேற்று இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 21 வயதுடைய பத்மநாதன் மகிந்தன் என்பவரே பலியாகியுள்ளார். குறித்த இளைஞர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. நேற்று மாலை முதல் காணாமற் போயிருந்த நிலையில் இன்று காலையில் கிணற்றிலிருந்து குறித்த இளைஞர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.