வட மாகாண மீன்பிடி போக்குவரத்து அமைச்சின் திட்ட மீளாய்வு ஒன்றுகூடல்
வடக்கு மாகாண மீன்பிடி, போக்குவரத்து, கிராம அபிவிருத்தி, வர்த்தக வாணிபம், வீதி அபிவிருத்தி மற்றும் மோட்டார் போக்குவரத்து அமைச்சின் 2015 ஆம் ஆண்டுக்கான திட்ட மீளாய்வு ஒன்றுகூடல் நடைபெற்றுள்ளது.
நேற்று வெள்ளிக் கிழமை நண்பகல் வீதி அபிவிருத்தி திணைக்கள மாகாண பணிப்பாளர் அலுவலக கேட்போர் கூடத்தில் வடக்கு மீன்பிடி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களது தலைமையில் இடம்பெற்றது.
இவ் ஒன்றுகூடலுக்கு, அமைச்சின் கீழுள்ள அனைத்து திணைக்களங்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
அமைச்சின் செயலாளர், பிரதம கணக்காளர் மற்றும் திணைக்கள பணிப்பாளர்கள், உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.