சோபித்த தேரரின் பதவி யாருக்கு ? இன்று தீர்மானிக்கப்படும்
மாதுலுவாவே சோபித்த தேரரின் மரணத்தின் பின்னர் வெற்றிடமாகிய சமூக நீதிக்கான மக்கள் இயக்கத்தின் அமைப்பாளர் பதிவிக்கு தகுதியானவரை நியமிக்கும் பணிகள் இன்று இடம்பெறவுள்ளன.
அதற்காக சமூக நீதிக்கான மக்கள் இயக்கத்தின் அதி உயர் பீட உறுப்பினர்கள் இன்று கோட்டே நாகவிரையில் கூடவுள்ளனர் .
இதுவரை குறித்த பதவிக்கு இருவரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக ஊடகங்கள் மூலம் தெரியவந்துள்ளது.பேராசிரியர் சரத் விஜேசூரிய மற்றும் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் தம்பர அமில தேரர் ஆகியோரின் பெயர்களே பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
என்றாலும் தனது பெயர் குறித்த பதவிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் உண்மையில்லை என பேராசிரியர் சரத் விஜேசூரிய தெரிவித்துள்ளார்.அதேவேளை தம்பர அமில தேரர் குறித்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார் என ஏற்கனவே ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.