அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களமே முடிவு எடுக்கும்
அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களம் தான் முடிவு செய்ய வேண்டும் என சட்டம் ஒழுங்கு மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சர் திலக் மாரப்பன தெரிவித்துள்ளார்.
யாழில் புதிதாக அமைக்கப்பட்ட சிறைச்சலையினை நேற்று திறந்து வைத்து உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.,
சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளின் எண்ணிக்கையினை நூற்றுக்கு இருபத்திஐந்து வீதமாக குறைக்க வேண்டும். நாட்டில் 18 ஆயிரம் தொடக்கம் 20 ஆயிரம் வரையிலானவர்கள் சிறைக்கைதிகளாக உள்ளனர்.
ஒவ்வொருவருக்கும் நாளொன்றுக்கு 500 ரூபாய் அரசாங்கம் செலவழிக்கின்றது. அதனால் அரசுக்கு பாரிய செலவு ஏற்படுகின்றது. கைதிகளில் தமிழ் சிங்கள பேதமின்றி அவர்களும் மனிதர்கள் தான் என்ற எண்ணத்திலையே பார்க்கப்படுகின்றனர்.
அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் தற்போது பேசப்பட்டு வருகின்றது அவர்களின் விடுதலை தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களம் தான் முடிவு செய்ய வேண்டும்.யாழில் அமைக்கப்பட்டு உள்ள இந்த சிறைசாலை வசதிளுடன் கூடிய சிறைச்சாலை என கூறப்படுகின்றது. இதில் அவ்வாறு எந்த வசதியும் இல்லை. .
வெளி நாடுகளில் உள்ளது போன்று ஒரு அறையில் (செல்லில்) ஒருவர் இருவரை தான் தடுத்து வைக்க வேண்டும். அவ்வாறான நிலைமை ஏற்பட்டாலே இது வசதியான சிறைச்சாலை ஆகும் என தெரிவித்தார்.