Breaking News

அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படாவிட்டால் தீபாவளியை துக்க தினமாக அனுஷ்டிக்கவும்

தமிழ் அர­சியல் கைதிகள் யாவ­ரையும் ஒரே தினத்தில் பொது மன்­னிப்பு வழங்கி விடு­தலை செய்­யாமல் அவர்­களை கட்டம் கட்­ட­மாக விடு­தலை செய்­யப்­போ­வ­தாக அர­சாங்கம் கூறி வரு­கின்­றமை வேதனை தரும் விட­ய­மாகும்.

எனவே, இதற்கு எமது எதிர்ப்பை வெளிக்­காட்டி தமிழ் அர­சியல் கைதிகள் யாவ­ரையும் ஒரே தினத்தில் விடு­தலை செய்ய வேண்டும் என்­பதை உணர்த்தும் வகையில் இந்­துக்கள் தீபா­வளி தினத்தை துக்க தின­மாக அனுஷ்­டிக்க வேண்டும் என அம்­பாறை மாவட்ட சிவ­நெறி அறப்­பணி மன்­றத்தின் தலைவர் வை.கஜேந்­திரா, செய­லாளர் வே.சர­வ­ண­பவன் ஆகியோர் இணைந்து விடுத்­துள்ள அறிக்­கையில் கோரிக்கை விடுத்­துள்­ளனர்.

அந்த அறிக்­கையில் மேலும் கூறப்­பட்­டுள்­ள­தா­வது,

யுத்தம் இடம்­பெற்று, பின்னர் யுத்தம் முடி­வுக்கு கொண்­டு­வ­ரப்­பட்ட நாடு­களின் வர­லாற்றை ஒரு தடவை மீட்­டிப்­பார்த்தால் யுத்த கால கைதிகள் பொது மன்­னிப்பு அளிக்­கப்­பட்டு விடு­தலை செய்­யப்­பட்ட வர­லாறு உண்டு.இந் நாட்டில் யுத்தம் முடி­வுக்கு கொண்­டு­வ­ரப்­பட்டு, ஆறு வரு­டங்கள் கடந்து விட்ட போதிலும் தமிழ் அர­சியல் கைதி­களை விடு­விக்­காமை வேத­னைக்­கு­ரிய விட­ய­மாகும்.

கடந்த ஆட்­சி­யா­ளர்­களைப் போன்று தற்­போ­தைய ஆட்­சி­யா­ளர்கள் இருந்து விடாமல் பௌத்த மத போத­னை­களை அனு­ச­ரித்து அன்பு, காருண்யம் போன்ற உய­ரிய பண்­புக்­க­ளுக்­க­மைய தமிழ் அர­சியல் கைதி­களை விடு­தலை செய்ய வேண்­டு­மென உருக்­க­மாக கோரிக்கை விடுக்­கின்றோம்.

தமிழ் அர­சியல் கைதி­களின் விடு­தலை இடம்­பெ­றாது போனால் அனைத்து இந்து மக்­களும் ஆடம்பரம் களியாட்டம் என்ப வற்றை தவிர்த்து தீபாவளிப் பண்டிகையை துக்க தினமாக அனுஷ்டிக்க வேண்டுமென்று கேட்டுள்ளனர்.