லசந்த கொலை விவகாரத்தில் முன்னாள் பொலிஸ்மா அதிபர் உட்பட பலரிடம் விரைவில் சி.ஐ.டி.விசாரணை?
சுட்டுக் கொலைச் செய்யப்பட்ட சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் ஒருவர் உள்ளிட்ட பல சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர்களிடம் விசாரணை நடத்த குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தீர்மானித்துள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்ரமரத்ன மற்றும் கல்கிஸை பொலிஸ் நிலையத்தின் முன்னாள் சிரேஷ்ட உத்தியோ கத்தர்கள் பலரே இவ்வாறு விசாரணை செய்யப்படவுள்ளதாக அறியமுடிகின்றது.
குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன, அதன் பணிப்பாளர் சிரே ஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நாகஹமுல்ல ஆகியோரின் மேற்பார்வையில், உதவி பொலிஸ் அத்தியட்சர் திசேராவின் கீழ் முன்னெடுக்கப்பட்டுவரும் லசந்த கொலை விவகாரம் தொடர்பில் பல்வேறு தகவல்கள் கசிந்துள்ள நிலையிலேயே முன்னாள் உயர் பொலிஸ் அதிகாரிகள் பலர் விசாரணைக்கு முகம் கொடுக்கவுள்ளதாக தெரியவருகின் றது.
லசந்த கொலை தொடர்பில் ஆரம்பத்தில் கல்கிஸை பொலிஸாரே விசாரணைகளை மேற்கொண்டுவந்த நிலையில், பின்னரேயே அது குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு மாற்றப்பட்டது. இந்த நிலையில் லசந்த மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட கல்கிஸை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இடத்தில் இருந்து அப்போது தடயப் பொருட்களில் ஒன்றான லசந்தவின் குறிப்புப் புத்தகம் மீட்கப்பட்டிருந்தது. அந்த குறிப்புப் புத்தகம் உள்ளிட்ட மேலும் சில தடயங்களும் தற்போது காணாமல் போயுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தகவல்களை வெளிப்படுத்திக்கொண்டுள்ள நிலையிலேயே மூத்த பொலிஸ் அதிகாரிகள் பலர் விசாரணைகளுக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.
இதனிடையே இந்த கொலை விவகாரம் தொடர்பில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு மன்றினால் விடுதலை செய்யப்பட்ட இராணுவ புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தரான கந்தே கெதர பியவன்சவை மீளவும் விசாரணை செய்வது குறித்தும் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அவதானம் திரும்பியுள்ளது.
கடந்த 2009 ஆம் ஆண்டு லசந்த கொலைச் செய்யப்பட்டிருந்த நிலையில் கந்தேகெதர பியவன்சவும் பிறிதொரு சந்தேக நபரான பிச்சை ஜேசுதாஸனும் 2010ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 26ஆம் திகதி பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.
ஜேசுதாஸன் விசாரணையின் இடை நடுவிலேயே உயிரிழந்து விட்ட நிலையில் பிய வன்ஸ கல்கிஸை நீதிமன்றுக்கு விஷேட வாக்கு மூலம் ஒன்றை வழங்கிய பின்னர் விடுதலைச் செய்யப்பட்டிருந்தார்.இந்த நிலையிலேயே பியவன்சவை மீண் டும் விசாரணைக்கு உட்படுத்த குற்றப் புல னாய்வுப் பிரிவினர் தீர்மானித்துள்ளனர்.