Breaking News

மக்­களின் வாழ்­வியல் விட­யங்­களில் இரா­ணு­வத்­தினர் தலை­யி­டக்­கூ­டாது - மாவை கோரிக்கை

பொது மக்­களின் வாழ்­வியல் விட­யங்­க ளில் இரா­ணுவத்தினரும், கடற்­ப­டை­யின ரும் தலை­யி­டு­வதை நிறுத்­த­வேண்டும் எனத் தெரி­வித்த தமி­ழ­ரசுக் கட்­சியின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மாவை சேனா­தி­ராஜா, மக்­களின் வாழ்­வியல் தேவை­களை அரச அதி­கா­ரிகள், மக்கள் பிர­தி­நி­திகள் தலை­யிட்டு தீர்வு காண்­பார்கள் என்றும் கூறினார்.

வலி­காமம் வடக்கில் உள்ள மயி­லிட்டி துறை­மு­கத்தை இட­மாற்­று­வது தொடர்பில் இடம்­பெ­யர்ந்து வாழும் மயி­லிட்டி கடற்­றொ­ழி­லா­ளர்­களின் கையெ­ழுத்துக்கள் பெற முயற்சிக்கப்படுகின்றமை மற்றும் கலந்­து­ரை­யா­டல்கள் மேற்­கொள்­ளப்­பட்­டமை தொடர்பில் பத்திரிகை ஒன்று எழுப்பிய கேள்விக்கு  அவர் இதனைத் தெரி­வித்தார்.

குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரி­விக்­கையில்.

நாங்கள் புதிய அர­சாங்­கத்தில் இணைந்து கொள்­ளா­விட்­டாலும் ஒரு நல்­லாட்­சிக்­கா­கவும் தமிழ் மக்­க­ளு­டைய அன்­றாட பிரச்­சி­னைக்கு தீர்வு காண்­ப­தற்­கா­கவும் தமிழ் தேசி­யக்­ கூட்­ட­மைப்பு, அர­சிற்கு ஆத­ரவு வழங்­கு­வது என்ற தீர்­மா­னத்­திற்கு அமை­வாக நாங்கள் செயற்­பட்டு வரு­கின்றோம்.

தமிழ் மக்­களின் நிலங்­களை அவர்­க­ளிடம் ஒப்­ப­டைக்கும் விட­யத்தில் சில முன்­னேற்ற கர­மான நட­வ­டிக்கை நடை­பெற்­று­வ­ரு­கின்­றது. குறிப்­பாக வலி­காமம் வடக்கு, கிழக்­கிலும் மற்றும் சம்பூர் பிர­தே­சத்­திலும் ஒரு பகுதி விடு­விக்­கப்­பட்­டுள்­ளது.

இதே­வேளை வலி­காமம் வடக்கில் மயி­லிட்டி துறை­முகப் பகு­தி­களில் மக்கள் மீள்­கு­டி­யேற்­றப்­ப­டலாம். அப்­ப­கு­தியில் துறை­மு­கத்தை மீன­வர்கள் பயன்­ப­டுத்­து­வது தொடர்பில் அர­சுடன் பேச்­சு­வார்த்தை எம்மால் நடத்­தப்­பட்­டது.

மேலும் அப­க­ரிக்­கப்­பட்ட காணிகள் சொந்த மக்­க­ளிடம் ஒப்­ப­டைக்­கப்­ப­டவும் சொந்த இடத்தில் அப்­ப­குதி மக்கள் தொழில்­ந­ட­வ­டிக்­கையில் ஈடு­பட வேண்டும் என்­பது தொடர்­பிலும் நாம் உறு­தி­யாக இருக்­கின்றோம். அதற்கு ஏற்ப நாம் செயற்­பட்டு வரு­கின்றோம்.

இவ்­வா­றான பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காண்­ப­தற்­கான பேச்சுவார்த்­தைகள், இணக்­கங்கள் இருக்­கின்ற நிலையில் கடற்­ப­டை­யினர் மயி­லிட்­டியில் வாழும் கடற்றொழி­லா­ளர்­களை சந்­தித்து உங்­க­ளுக்­கான துறை ­மு­கத்தை பருத்­தி­த்து­றையில் அமைத்து வரு­வ­தாகக் கூறு­கின்­றனர். அத்­துடன் அதற்­காக தொழி­லாளர்­க­ளிடம் இருந்து கையெ­ழுத்து பெறு­வ­தற்­கான முயற்­சி­களும் கடற்­ப­டை­யி­னரால் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது.

இத்­த­கைய செயற்­பாடு மீன­வர்கள் மத்­தி­யிலும் மயி­லிட்டி வாழ் மக்­க­ளி­டமும் சந்­தே­கத்­தையும் அதிருப்­தி­யையும் ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. மயி­லிட்டித் துறை­மு­கத்தை தங்­க­ளிடம் கைய­ளிப்­ப­தற்கு மாற்­றுத்­திட்­ட­மாக இந்த முயற்சி கடற்­ப­டை­யி­னரால் மேற்­கொள்­ளப்­ப­டு­வ­தாக மக்கள் என்­னிடம் தெரி­வித்­துள்­ளனர். இத்­த­கைய பிரச்­சினை தொடர்பில் நாம் விசேட அக்­கறை கொண்­டுள்ளோம்.

குறிப்­பாக துறை­முகம் அமைத்தல், காணி விடு­விப்பு தொடர்பில் கடற்­ப­டை­யி­னரோ இரா­ணு­வத்­தி­னரோ மக்­க­ளிடம் சென்று நட­ வ­டிக்கை எடுக்கத் தேவை­யில்லை. எவ­ரு க்கும் அந்த உரித்தும் கிடை­யாது. இத்­த­கைய பிரச்­சினை தொடர்பில் தீர்வுகாண பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், சிவில் சமூகம், அரச அதிகாரிகள் காணப்படும்போது நேரடியாக கடற்படையினர், இராணுவத்தினர் இதில் தலையிட்டு கையொப்பங்கள் வேண்டப்ப டுவதை பகிரங்கமாக நாம் கண்டிக்கின் றோம்.

இத்தகைய செயற்பாட்டை நாம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடமும் தெரிவித்துள்ளோம் என்றார்.