ஜனாதிபதிக்கு எதிராக குற்றவியல் பிரேரணை - சிங்கள தேசிய அமைப்புக்களின் ஒன்றியம் எச்சரிக்கை
ஜனாதிபதிக்கு எதிராக எந்தச் சந்தர்ப்பத்திலும் குற்றவியல் பிரேரணையை கொண்டுவர முடியும் என எச்சரிக்கை விடுத்துள்ள சிங்கள தேசிய அமைப்புகளின் ஒன்றியம், இலங்கை படையினருக்கு எதிராக கடும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு புதிய அறிக்கையொன்றை தமிழ் தேசிய கூட்டமைப்பு அண்மையில் ஜெனிவாவிற்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் குற்றம் சாட்டியது.
இது தொடர்பாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவரும் சிங்கள தேசிய அமைப்புக்களின் ஏற்பாட்டாளருமான டாக் டர் குணதாஸ அமரசேகர மேலும் தெரிவிக்கையில்;
பரணகம ஆணைக்குழுவின் அறிக்கையை ஜெனிவாவிற்கு முன்வைக்காது அதனை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னகத்தே வைத்துக் கொண்டுள்ளார். இச் செயற்பாடானது இலங்கையின் அரசியலமைப்பை மீறியதாகும்.
எனவே எந்தச் சந்தர்ப்பத்திலும் ஜனாதிபதிக்கு எதிராக குற்றவியல் பிரேரணையைக். கொண்டுவர முடியும். பரணகம அறிக்கை யை ஜெனிவாவிற்கு சமர்ப்பிக்கப்படாமையானது இந்த அரசு செய்த மிகப்பெரிய தவறாகும். இதனை சமர்ப்பிப்பதற்குத் தேவையான அளவு சந்தர்ப்பம் காணப்பட்டது. எனவே இதனை சமர்ப்பிக்காமை தேசத்துரோகமாகும்.
பரணகமவின் அறிக்கை ஜெனிவாவில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தால் எமக்கு எதிரான யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தீர்ந்து போயிரு க்கும். ஆனால் சர்வதேசத்தை வென்றுவிட் டோம் என மார்தட்டும் ஜனாதிபதி எமது படையினர் யுத்தக் குற்றங்களில் ஈடுபடவில்லை என நேரடியாக கூறியிருந்தால் அனைத்துப்பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைத்திருக்கும்.
இவ்வாறு நேரடியாக எவ்வித கருத்தையும் வெளியிடாது புதுப் புதுக் கதைகளைக் கூறுகின்றார். இதனால் எந்தப் பயனும் இல்லை. இவ்வாறு பரணகம அறிக்கையை ஜெனிவாவிற்கு முன்வைக்காது எமக்கு எதிரான விசாரணைகளுக்கு அரசு இணங்கியது தேசத்துரோகமாகும்.
இவ்வாறானதொரு சூழ்நிலையில் இலங் கைப் படையினருக்கு எதிராக தயாரிக்கப்பட்ட பொய்க் குற்றச்சாட்டுக்கள் அடங்கிய புதிதாக தயாரித்த அறிக்கையொன்றை தமி ழ்த் தேசியக் கூட்டமைப்பு அண்மையில் ஜெனிவாவிற்கு அனுப்பி வைத்துள்ளது. இப்புதிய அறிக்கை சுமந்திரன் தலைமை யில் தயாரிக்கப்பட்டுள்ளது.
எமது படையினர் இனச் சங்காரத்தை மேற்கொண்டனர் என்பதை உறுதிப்படுத்தவே இவ்வாறானதோர் புதிய அறிக்கையொன்று ஜெனிவாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு ஜனாதிபதியும் அரசும் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக அனைத்து தவறுகளையும் செய்து விட்டு ஜனாதிபதியினால் சர்வகட்சி மாநாடு கூட்டப்பட்டுள்ளது. இதற்கு என்ன தேவை என்பது எமக் குப் புரியவில்லை.
ஜெனிவா பிரேரணைக்கு முன்பதாகவே இவ்வாறான தொரு சர்வகட்சி மாநாடு கூட்டப்படவிருந்தது. ஆனால் அமெரிக்கா எமக்கு எதிரான பிரேரணையை ஜெனிவா வில் முன்வைத்து அது நடைமுறைப்படுத்த தயாராகிய நிலையில் எமக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ள சூழ்நிலையில் இலங்கை அரசு அமெரிக்க பிரேரணையை ஏற்றுக் கொண்ட நிலையில் எதற்காக சர்வகட்சி மாநாடு?
‘ஜெனிவா மலர்வளையத்திற்கு எதிர்க் கட்சியினதும் ஆதரவைப் பெற்றுக் கொண் டோம் என்பதை வெளிப்படுத்தவே சர்வ கட்சி மாநாடு என்ற கண் துடைப்பு நாடகம் நடத்தப்படுகிறது. எனவே அனைத்து எதிர்க்கட்சிகளும் சர்வ கட்சி மாநாட்டை பகிஷ்கரிக்க வேண்டும். என்றும் டாக்டர் குணதாஸ சமரசேகர தெரி வித்தார்.