Breaking News

அரசாங்கம் மீதான மக்கள் நம்பிக்கையில் வீழ்ச்சி!

ஊழல் மோசடி தொடர்பிலான விசாரணைகளில் முன்னேற்றம் இல்லாமையினால் அரசாங்கத்தின் மீதான நம்பிக்கை உடைக்கப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் அஜித் பீ பெரேரா தெரிவித்துள்ளார்.

அவன்கார்ட் நிறுவனத்தின் பிரச்சினை மாத்திரமின்றி மேலும் பல விசாரணைகள தொடர்பில் நம்பிக்கை இழந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து கருத்து வெளியிட்டவர்,

களுத்துறை மாவட்டத்தின் உறுப்பினர் மற்றும் கடந்த கால அமைச்சர் ஒருவரினாலே இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணையம் முன்னர் பயனற்ற இருந்தமை எங்களுக்கு தெரியும். அந்த விசாரணை நடவடிக்கைகள் அதற்கு பின்னர் ஆரம்பமாகவில்லை. அத்துடன் மேலும் பல காரணங்கள் உள்ளன.

உங்களுக்கு நினைவுள்ளதா ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ பென்ஸ் வாகனத்தின் இலக்கத்தினை பயன்படுத்திய ரேசிங் கார் ஒன்று கைது செய்யப்பட்டன. எனினும் இதுவரையில் அதற்கான குற்றச்சாட்டுகள் சுமத்தப்படவில்லை.

தற்போது வரையில் அந்த வாகனம் நீதிமன்ற வளாகத்தில் இல்லை. அந்த வாகனத்தை மீளவும் உரிய நபரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக எனக்கு தகவல் கிடைத்தன.ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாகனத்தின் இலக்கத்துடனான வாகனத்தை எவ்வாறு மீளவும் ஒப்படைக்க முடியும் என்று எனக்கு புரியவில்லை.

இவ்வாறான காரணங்களினால் புதிய அரசாங்கம் குறித்து மக்களுக்கு நம்பிக்கை இழக்கப்பட்டுள்ளதனை தான் ஏற்றுக்கொள்வதாக பிரதி அமைச்சர் அஜித் பீ.பெரேரா மேலும் குறிப்பிட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.