பதிலுக்கு நீதி அமைச்சரிடம் பொன்சேகா 500 கோடி நஷ்டஈடு கோரல்
நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவிடம் 500 கோடி ரூபா நஷ்டஈடு கோரி வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக ஜனநாயகக் கட்சித் தலைவர் பீல்ட் மாஷல் சரத் பொன்சேகா இன்று மினுவாங்கொடையில் வைத்து தெரிவித்துள்ளார்.
அவென்கார்ட் பாதுகாப்பு கம்பனிக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியதாக சரத் பொன்சேகா தன்மீது முன்வைக்கும் குற்றச்சாட்டுக்களுக்கு எதிராகவும், பொன்சேகாவின் உரைகளின் போது தனது நற்பெயருக்கு அபகீர்த்தி ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்து நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ, சரத் பொன்சேகாவுக்கு எதிராக 500 மில்லியன் ரூபா நஷ்டஈடு கோரி வழக்குத் தாக்கல் செய்யப் போவதாக நேற்று அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.