இறுதிப் போரில் உயிரிழந்தவர்களுக்கு முள்ளிவாய்க்காலில் நினைவாலயம்!
முள்ளிவாய்க்கால் மண்ணில் இறுதிப் போர் நடைபெற்ற காலப்பகுதியில் படுகொலை செய்யப்பட்ட அப்பாவி தமிழ் மக்கள் நினைவாக நினைவாலயம் ஒன்றை அமைப்பதற்கான நடவடிக்கைகளை வட மாகாண சபை முன்னெடுத்துள்ளதுடன், நினைவாலயம் அமைப்பதற்கான முதற் கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க விசேட குழு ஒன்றும் நியமிக்கப்பட்டுள் ளது.
இந்நிலையில் குறித்த பகுதியில், போரில் கொல்லப்பட்ட மக்களுடைய நினைவாக நினைவாலயம் ஒன்றை அமைக்க வேண் டும் என வட மாகாண சபையில் 2014 ஆம் ஆண்டு, தை மாதம் 27ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்ட மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் பிரேரணை ஒன்றை முன்மொழிந்திருந்ததுடன், குறித்த பிரேரணை சபை யில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த ஒன்றரை வருடங்களாக இந்த தீர்மானம் குறித்து எந்த முன்னேற்றமும் இல்லாத நிலையில் கடந்த 4ஆம் திகதி நடைபெற்ற வடமாகாண சபையின் ஆளும் கட்சி கூட்டத்தில் இவ்விவகாரம் பேசப்பட்டது.
இந்நிலையில் மேற்படி நினைவாலயம் அமைப்பதற்கான காணி பெறுதல் மற்றும் முதற்கட்ட நடவடிக்கைகளை எடுப்பதற் கான, விசேட குழு ஒன்றை முதலமைச்சர் நியமித்துள்ளார்.