Breaking News

வட­மா­காண பாட­சா­லை­களில் வேண்­டத்­த­காத பல செயல்கள் வேக­மாகப் பரவி வரு­கின்­றன - விக்­னேஸ்­வரன்

வட­மா­கா­ணத்­தி­லுள்ள பாட­சா­லை­களில் தற்­போது வேண்­டத்­த­காத பல செயல்கள் வேக­மாகப் பரவி வரு­வது அச்­சத்­தையும் மன வேத­னை­யையும் தரு­கின்­றன என வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­னேஸ்­வரன் தெரி­வித்­துள்ளார்.

வட­மா­கா­ணத்தில் இயங்­கு­கின்ற பாட­சாலை அதி­பர்­க­ளுக்­கான பயிற்சிப் பட்­டறை நேற்­றைய தினம் கைதடி ஸ்ரீவி­நா­யகர் மண்­ட­பத்தில் இடம்­பெற்­றது. இந்­ நி­கழ்வில் பிர­தம விருந்­தி­ன­ராகக் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­டவாறு தெரி­வித்தார்.

அவர் அங்கு மேலும் கூறுகையில்,

போதை வஸ்து பாவனை, நவீன தொழில்­நுட்ப இலத்­தி­ர­னியல் கரு­விகள் மூல­மாக வேண்­டத்­த­காத இணைய பக்­கங்­களில் நுழைந்து உணர்­வு­களைத் தூண்டக் கூடிய காட்­சி­களைப் பார்­வை­யிடல் போன்ற செயற்­பா­டு­களில் மாணவ சமு­தாயம் ஈடு­ப­டு­வதால் கல்­வியில் அக்­க­றை­யில்­லாமல் காணப்­ப­டு­கின்­றனர்.

இத்­த­கைய புல­னு­ணர்வு சார்ந்த விட­யங்­களில் பொழுதைக் கழித்து கல்­வியை இழந்து, உடல் உளத் தூய்­மை­க­ளையும் இழக்க வேண்­டிய ஒரு கால­மாக இந்தக் கால கட்டம் மாறி­யுள்­ளது.

நாங்கள் வாழ்ந்து கெட்ட சமு­தா­ய­மாகக் கணிக்­கப்­படக் கூடாது. வாழ்ந்து, வீழ்ந்து, மேலும் மேலெ­ழுந்து வாழப்­போகும் வலிமை மிக்க சமு­தா­ய­மாகப் போற்­றப்­பட வேண்டும். அதில் அதி­பர்கள், ஆசி­ரி­யர்­களின் பணி மகத்­தா­னது. அதை மறந்து விடா­தீர்கள்.

பத்­தி­ரி­கைகள் மற்றும் ஒளி ஒலி­ப­ரப்புச் சாத­னங்கள் மூலம் தினமும் கிடைக்­கப்­பெ­று­கின்ற செய்­தி­களைப் பார்க்­கின்ற போது மன­துக்கு மிகவும் வேத­னை­யாக உள்­ளது. சில ஆசி­ரி­யர்கள் கூட மாணவ மாண­வி­யரைக் கீழ்த்­த­ர­மான நட­வ­டிக்­கை­க­ளுக்குப் பயன்­ப­டுத்­தி­ய­தாகக் குற்றஞ் சாட்­டப்­பட்டு அவர்கள் பணி இடை­நி­றுத்­தத்தில் கிடப்­ப­தாக அறி­கின்றேன். இவற்றில் எவ்­வ­ளவு தூரம் உண்மை, பொய் உள்­ள­தென்­பதை நான் அறியேன். எனினும், உண்­மைகள் ஏது­மி­ருப்பின் அவர்கள் ஆசி­ரி­யர்­க­ளாகக் கட­மை­யாற்­று­வ­தற்கு தகு­தி­யற்­ற­வர்கள் என்பது எனது கருத்து.

காரணம் ஒரு சட்­டத்­த­ரணி, ஒரு வைத்­தியர், ஒரு ஆசி­ரியர் என்போர் மக்­களின் உண்­மை­களை அறிந்து பழக வேண்­டி­யி­ருப்­பதால் நம்­பிக்கைப் பொறுப்­பா­ளர்­க­ளாகக் கட­மை­யாற்ற வேண்­டிய கடப்­பாடு உடை­ய­வர்­க­ளாக இருக்­கின்­றார்கள். அவர்கள் மீது கன­மான நம்­பிக்­கையைச் சமு­தாயம் வைத்­தி­ருக்­கின்­றது. அந்த நம்­பிக்­கைக்குப் பங்கம் ஏற்­படும் விதத்தில் நடந்து கொண்டால் அவர்கள் அத் தொழிலில் நீடிக்கத் தகுதி அற்­ற­வர்கள் ஆகின்­றார்கள்.

நல்ல விட­யங்கள் நடை­பெ­று­கின்ற போது தட்டிக் கொடுத்துப் பாராட்­டவும் அதேநேரம் பிழை­களைக் கண்­டிப்­புடன் திருத்­தவும் தவ­று­கின்­றவர் சிறந்த அதி­ப­ராக இருக்க முடி­யாது.

அதி­பர்­களில் பலர் இன்று ஏனோ தானோ என்ற நிலையில் பாட­சா­லை­க­ளுக்குச் சென்று வரு­வது கண்­கூடு. மாண­வர்­களைத் தண்­டித்தால் மனித உரிமை மீறல் வழக்­குகள் வரக் கூடும், ஆசி­ரி­யரைத் தண்­டித்தால் தனக்குக் கட்­டாய இட­மாற்றம் ஏற்­படக் கூடும் என்று இப்­ப­டி­யான சிக்கல்­களில் இருந்து விடு­ப­டு­வ­தற்கு எதையும் கண்­டு­கொள்­ளாமல் இருக்­கக்­கூ­டிய ஒரு பழக்­கத்தைக் கையாளத் தலைப்­ப­டு­கின் ­றனர். இல்­லையேல், அர­சியல் செல்­வாக் குப் பெற்ற ஒரு­வரின் வேட்­டியை அல்­லது சேலையைக் கெட்­டி­யாகப் பற்றிக் கொண்டு தான்­தோன்றித்தன­மாக நடந்து கொள்ளத் தலைப்­ப­டு­கின்­றார்கள்.

எந்த ஆசி­ரி­யரை எந்தப் பணிக்கு நிய­மிக்க வேண்டும் அல்­லது எந்தப் பாடத்தைப் படிப்­பிக்க நிய­மிக்க வேண்டும் என்­பது கூட அதி­பர்­களின் கட­மை­யாக இருக்க வேண்டும். ஆசி­ரி­யர்­களின் தகை­மைகளை,குணா­தி­ச­யங்­களை ஆராய்ந்து பரி­சீ­லித்துப் பார்த்துத் தீர்­மா­னங்­களை எடுக்க வேண் டும்.

மேலும் அதி­பர்கள், மாண­வர்­களின் பெற்­றோ­ரு­டனும் சிவில் சமூக ஆர்­வ­லர்­க­ளு­டனும் சுமுக உறவைப் பேண வேண் டும். பாட­சா­லைக்கு கொடைகள் எதிர்­ பார்க்­கப்­ப­டு­வ­தாயின், அவற்றின் சட்ட வலுவைப் பற்றி ஆராய்ந்து நட­வ­டிக்­கைகள் எடுக்க வேண்டும். பெற்றோர், சமூக ஆர்­வ­லர்­க­ளு­ட­னான உங்கள் சுமுக உறவு முறை உங்கள் நடவடிக்கைகளை நியாயமானதாக எடுத்துக் காட்டவல்லன. வெளிப்படைத்தன்மை இல்லாமல் நடக் கும் நீதியான காரியங்களும் மக்களிடையே சந்தேகங்களை எழுப்பி விடுவன.

எல்லாப் பணிகளையும், கடமைகளையும் ஒரு அதிபர் தாமாகவே செய்யமுடியாது. அதனைப் பகிர்ந்து கொள்ள அவர் முன் வரவேண்டும். நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்களை அடையாளம் கண்டு இதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றார்.