Breaking News

நீதியமைச்சர் நல்லூர் ஆலயத்திற்கு விஜயம்!



யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச இன்றைய தினம்(செவ்வாய்கிழமை) நல்லூர் ஆலயத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

கொழும்பிலிருந்து பலாலி இராணுவ படைத்தலைமையகத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த அவர் அங்கிருந்து யாழில் வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தனை வழிபட்டுள்ளார்.

இதன்போது இராஜங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனும் உடன் சென்றிருந்தார்.

மேலும், நண்பகல் 12 மணியளவில் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச யாழ் நீதிமன்றத்திற்கு விஜயம் மேற்கொண்டு நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகள் உள்ளிட்டவர்களுடன் கலந்துரையாடல்களை முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.