Breaking News

சம்பந்தன் ஒரு தேசிய தலைவர் - சபையில் பிரதமர் ரணில் புகழாரம்

வடக்கின் பிரச்­சி­னை­களை எவ்­வாறு நோக்­கு­கின்­றாரோ அதே போன்று தெற்கின் பிரச்­சி­னை­க­ளையும் நோக்கும் இலங்­கையின் உண்­மை­யான தேசியத் தலைவர் இரா. சம்­பந்தன் என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க நேற்று சபையில் புக­ழாரம் சூட்­டினார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை உயர் தேசிய கணக்­கியல் டிப்­ளோமா பாட நெறி மாண­வர்கள் உயர்­கல்வி அமைச்சு முன்­பாக வைத்து பொலி­ஸாரால் தாக்­கப்­பட்­டமை தொடர்பில் எதிர்க்­கட்சித் தலை­வ­ரான இரா. சம்­பந்தன் விசேட வினாவை எழுப்­பினார்.

இத­னை­ய­டுத்து சபையில் எழுந்த பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க எதிர்க்­கட்சித் தலை­வ­ரான இரா. சம்­பந்தன் தான் இலங்­கையின் உண்­மை­யான தேசியத் தலைவர் எதிர்க்­கட்சித் தலை­வ­ராவார். வடக்கின் பிரச்­சி­னை­களை அவர் எவ்­வாறு நோக்­கு­கின்­றாரோ அதே­போன்று தென் பகுதி பிரச்­சி­னை­க­ளையும் நோக்­கு­கின்றார்.

இதே­போன்று தென் பகு­தியில் காணப்­படும் ஏனைய பிரச்­சி­னை­க­ளையும் இரா. சம்­பந்தன் விரைவில் இங்கு எழுப்­புவார் என்று நான் நம்­பு­கின்றேன் என்றார்.பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க இவ்­வாறு கூறி­ய­போது சபை­யி­லி­ருந்த மஹிந்த ராஜபக்ஷ ஆத­ரவு அணி­யினர் கூச்­ச­லிட்­டனர்.இதன்போது எழுந்த எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் நான் எழுப்பிய கேள்விக்கு பதில் வேண்டும் என்றார்.