Breaking News

பாலியாறு வீதி வெள்ளத்தால் மூழ்கியது : போக்குவரத்துக்கள் நிறுத்தம்



மன்னார் – யாழ்ப்பாணம் ஏ32 வீதியில் பாலியாறு பகுதியில் வீதிக்கு குறுக்காக வெள்ளம் ஊடறுத்து பாய்வதால் குறித்த வீதியில் போக்குவரத்துக்கள் பாதிக்கபப்ட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் குறித்த வீதியால் சிறியரக வாகனங்கள் பயணம் செய்வது தற்காலிகமாக தடைப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தொடர்ந்து பெய்துவரும் மழையால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக குறித்த வீதி வெள்ளத்தால் மூழ்கியுள்ளதாகவும் தெரிவிக்கபப்ட்டுள்ளது.எனினும், வெள்ள நீரின் அளவு குறைவடைந்தால் சிறியரக வாகனங்கள் மட்டுமே செல்லமுடியும் என அப்பிரதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.