Breaking News

புலிகளுடன் தொடர்பில்லாத தமிழ் கைதிகள் விடுவிக்கப்படுவார்கள்

தடுப்­புக்­கா­வலில் உள்ள தமிழ் கைதிகள் தொடர்பில் நியா­ய­மான வகையில் சட்ட நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­படும். புலி­க­ளுடன் தொடர்­பில்­லாத தமிழ் கைதிகள் விடு­விக்­கப்­ப­டுவர். 

அவர்கள் மீது சுமத்­தப்­பட்­டுள்ள வழக்­கு­களின் அடிப்­ப­டையில் ஆராய்ந்து தீர்­மானம் எடுக்­கப்­படும் என்று சட்டம்,ஒழுங்கு மற்றும் சிறைச்­சா­லைகள் மறு­சீ­ர­மைப்பு அமைச்சர் திலக் மாரப்­பன தெரி­வித்தார்.

ஜனா­தி­பதி மற்றும் பிர­தமர் தலை­மையில் விரைவில் இது குறித்து பேச்­சு­வார்த்தை முன்­னெ­டுக்­கப்­படும் எனவும் அவர் குறிப்­பட்டார்.

தமிழ் அர­சியல் கைதி­களின் விடு­தலை தொடர்பில் பிர­தமர் மற்றும் ஜனா­தி­பதி கொடுத்த வாக்­கு­று­தி­களை நிறை­வேற்ற வேண்டும் என்று தொடர்ச்­சி­யாக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு வலி­யு­றுத்­தி­வரும் நிலையில் சிறைக் கைதி­களின் விடு­தலை தொடர்பில் அர­சாங்­கத்தின் நிலைப்­பாடு எவ்­வாறு உள்­ள­தென பத்தரிகை ஒன்று எழுப்பிய கேள்விக்கே அமைச்சர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.அவர் மேலும் கூறு­கையில்,

தமிழ் அர­சியல் கைதி­கௌன யாரையும் தடுத்து வைக்­க­வில்லை. ஆனால் இவர்­களை அர­சியல் கைதிகள் என தெரி­வித்து வரு­கின்­றனர். அதேபோல் இவர்கள் அனை­வ­ருக்கும் பொது மன்­னிப்பு வழங்­கப்­பட வேண்டும் எனவும் தமிழர் தரப்பு வலி­யு­றுத்தி வரு­கின்­றது. கடந்த காலத்தில் இருந்தே இந்த விடயம் தொடர்பில் கருத்­துகள் முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றன. எனினும் சிறைச்­சா­லை­களில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள தமிழ் கைதிகள் தொடர்பில் விரைவில் ஒரு ஸ்­தி­ர­மான தீர்­மானம் எடுக்க முடி­யா­துள்­ளது. ஏனெனில் இவர்கள் புலி­க­ளுடன் தொடர்­பு­டையவர்கள் என்ற சந்­தே­கத்­தின்­பே­ரி­லேயே கைது செய்­யப்­பட்­டுள்­ளனர்.

அதேபோல் எவ்­வா­றான குற்­றச்­சாட்­டு­களின் அடிப்­ப­டையில் இவர்கள் கைது­செய்­யப்­பட்­டுள்­ளனர் என்­பது தொடர்பில் சரி­யான ஆதா­ரங்­களை ஆரா­ய­வேண்­டி­யுள்­ளது. இவ்­வாறு தடுப்­புக்­கா­வலில் உள்ள அர­சியல் கைதிகள் ஒரு­சிலர் மீது குற்­ற­வா­ளிகள் என்று நீதி­மன்றம் தீர்ப்­ப­ளித்­துள்­ளது. அதேபோல் யுத்த கால­கட்­டத்தில் புலி­க­ளுடன் தொடர்­பு­பட்­டி­ருந்­த­தையும், குற்­ற­வா­ளிகள் என்­பதை ஒப்­புக்­கொண்­ட­வர்­களும் இந்த பட்­டி­யலில் உள்­ளனர்.

சந்­தே­கத்தின் பேரில் கைது செய்­யப்­பட்டு தொடர்ந்தும் தடுப்புக் காவலில் சிலரும் உள்­ளனர். ஆகவே இவை தொடர்பில் சரி­யான விசா­ர­ணைகள் மேற்­கொண்டு நட­வ­டிக்கை எடுக்­க­வேண்­டி­யுள்­ளது.

எனவே குற்றம் சுமத்­தப்­பட்டு அது நிரூ­பிக்­கப்­பட்­டுள்ள கைதி­களை விடு­விக்க முடி­யாது. அவர்­க­ளுக்கு பொது­மன்­னிப்பு கொடுப்­பது எந்த வகை­யிலும் சாத்­தி­ய­மற்­றது. எனவே புலி­க­ளுடன் தொடர்­பு­டைய நபர்­களை சட்ட முறை­மைக்கு அமைய தண்­ட­னைக்கு உட்­ப­டுத்த வேண்டும். அவர்கள் தொடர்பில் மாற்று நட­வ­டிக்­கை­க­ளுக்கு வாய்ப்­புகள் இல்லை.

ஆனால் விசா­ர­ணைகள் இன்றி தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள தமிழ் கைதி­களை பிணையில் விடு­விக்க முடியும். அதற்­கான நட­வ­டிக்­கை­களை அர­சாங்கம் தற்­போது மேற்­கொண்டு வரு­கின்­றது. எவ்­வாறு இருப்­பினும் குற்றம் இல்­லாத தமிழ் அர­சி யல் கைதிகள் தொடர்பில் நியா­ய­மான வகையில் அர­சாங்கம் செயற்­பட்டு அவர்­களின் விடு­தலை தொடர்பில் கூடிய அக்­கறை செலுத்தும்.

இவர்­களை விடு­விப்­பது தொடர்பில் நீதி­ய­மைச்சர் விஜ­ய­தாச ராஜபக் ஷ தலை­மையில் குழு­வொன்று ஏற்­க­னவே அமைக்­கப்­பட்­டுள்­ளது. அதேபோல் தடுப்­புக்­கா­வலில் உள்ள தமிழ் அர­சியல் கைதி­களின் விடு­தலை தொடர்பில் பிர­தமர் முக்­கி­யத்­துவம் கொடுத்து வருகின்றார். ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் இதனுடன் தொடர்புடைய அனைத்து தரப்பினரும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவும் உள்ளனர். விரைவில் நாம் அந்த நடவடிக்கைகளை மேற்கொள்வோம். பிரதமர் மற்றும் ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய நாம் செயற்பட்டு வருகின்றோம் எனக் குறிப்பிட்டார்.