Breaking News

அஸ்வினின் இரட்டை அசத்தல் சாதனைகள்

இந்திய - தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி மொகாலியில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்திய அணி 201 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. 

அதேபோல், தென்னாபிரிக்க அணியை 184 ஓட்டங்களுக்குள் இந்திய வீரர்கள் சுருட்டினர். அதில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் அபாரமாக பந்து வீசி 5 விக்கெட்டுக்களை சாய்த்தார். 

இந்த டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்டுகளை எடுத்ததன் மூலம் அஸ்வின் பல்வேறு முக்கிய சாதனைகளை செய்துள்ளார். இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுக்களை வீழ்த்தியவர் என்ற பெருமையை தனதாக்கி கொண்டார். 29 டெஸ்ட் போட்டிகளில் அவர் இந்த சாதனையை செய்துள்ளார். 

அதேபோல், தொடக்க பந்துவீச்சாளராக களமிறங்கி 50 விக்கெட்டுகளை சாய்த்தவர் என்ற சாதனையை 105 ஆண்டுகளுக்கு பிறகு நிகழ்த்தியுள்ளார். அதற்கு முன்பாக இங்கிலாந்து அணியை சேர்ந்த கொலின் பிலைத் என்ற வீரர் 1902-1910 காலத்தில் விளையாடி 13 டெஸ்ட் போட்டிகளில் தொடக்க பந்து வீச்சாளராக பந்துவீசி 50 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். 

மேலும் 13-வது முறையாக 5 விக்கெட்டுக்களை அஸ்வின் எடுத்துள்ளார்.