Breaking News

நான் இன்று பொது எதிரி – மஹிந்த

தான் இன்று வரை ஐக்கிய தேசியக் கட்சியினதும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினதும் பொது எதிரியாக மாறியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கட்சிகளை விடுத்து ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தனித்துப் போட்டியிட்டால் தோல்வியையே சந்திக்கும்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து இராஜினாமாச் செய்யுமாறு சிலர் தன்னைக் கேட்கின்றனர். வேறு சிலர் விலகக் கூடாது எனக் கூறுகின்றனர். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் போஷகராக இருந்து தான் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்து வருவதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

நேற்று மாலை அம்பலந்தொட்ட, ரிதியகம பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.