Breaking News

மீள தாயகத்திற்கு வந்து சேவை செய்யுங்கள்! ஜனாதிபதி அழைப்பு

நாட்டினுள் சுதந்திரம், ஜனநாயகத்தை உறுதி செய்துள்ளதாகவும் மீண்டும் தாய் நாட்டுக்கு வந்து தங்கள் சேவையை வழங்க வேண்டும் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாய்லாந்து வாழ் இலங்கையர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். 

தாய்லாந்துக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அங்குள்ள இலங்கையர்களை சந்தித்த வேளையே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

நேற்று மாலை இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. அத்துடன் தாய்லாந்தின் இலங்கைக்கான தூதுவராலயத்தால் குறித்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் வர்த்தகர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.