Breaking News

அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பாக – மைத்திரி, ரணில், சந்திரிகாவைச் சந்திக்கிறது கூட்டமைப்பு

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர்  ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க ஆகியோருடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தவாரம் பேச்சு நடத்தவுள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர்  மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.


“நாடாளுமன்றம் இன்று கூடும் போது தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக இறுதி முடிவை எடுக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தும்.

இந்த விவகாரம் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும், பிரதமர்  ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க ஆகியோருடன் முக்கிய கலந்துரையாடல்கள் நடத்தப்படும்.

ஏற்கனவே ஜனாதிபதியைச் சந்திக்க  எம்மால் முயற்சி மேற்கொள்ளப்பட்ட போதும் அவர் தாய்லாந்து சென்றதால் அந்தச் சந்திப்பு நடைபெறவில்லை.  எனினும் இந்த வாரத்தில் அந்தச் சந்திப்பு நடைபெறும்.

இதன் போது தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, காணிகள் விடுவிப்பு மற்றும் வேலையற்ற பட்டதாரிகளுக்கு அரச வேலைவாய்பை வழங்குதல் தொடர்பாக கலந்துரையாடவுள்ளோம்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.